Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி அடுத்து இயக்கவிருக்கும் படம்
சினிமா

ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி அடுத்து இயக்கவிருக்கும் படம்

Share:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரஜினி - கமல் இணையும் படத்தை சுந்தர் சி இயக்க வாய்ப்பு கிடைத்து, அதற்கான அறிவிப்பையும் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டது.

ஆனால், அந்த அறிவிப்பு வெளிவந்த சில நாட்களிலேயே இப்படத்திலிருந்து தான் வெளியேறுவதாக சுந்தர் சி அறிவித்தார். இது மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. தற்போது சுந்தர் சி-க்கு பதிலாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர்.

இந்த நிலையில், சுந்தர் சி இயக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி அடுத்ததாக விஷாலை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார்.

கமர்ஷியல் ஆக்ஷன் என்டர்டைன்மெண்ட் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறாராம். மேலும் ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்