Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் இணைந்துள்ளாராம் நடிகர் மாதவன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் இணைந்துள்ளாராம் நடிகர் மாதவன்

நடிகர் மாதவன், சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார்.

இடையில் சிறிது காலம் ஓய்வில் இருந்தவர் பின் இறுதிச்சுற்று மூலம் மீண்டும் சிறப்பாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வருபவர் கடைசியாக டெஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் மாதவன் ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு-பிரியங்கா சோப்ரா நடிக்கும் புதிய படம் தயாராகி வருகிறது.

ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ப்ருத்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது மாதவன் இப்படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இருக்கும் என்று ராஜமௌலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →