Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டிய "சிக்கிடு" பாடல் வெளியீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டிய "சிக்கிடு" பாடல் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" பாடலின் விளம்பர வீடியோ என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கிடையே சிக்கிடு பாடலுக்கான விளம்பர வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வந்தது. பொதுமக்கள் பலரும் கூலி என குறிக்கும் பேட்சை கையில் அணிந்தபடி இருக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இத்தகைய ப்ரோமோஷன் வீடியோக்கள் சிக்கிடு பாடலின் எதிர்பார்ப்பை எகிற வைத்தன.. இந்நிலையில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "சிக்கிடு" பாடல் இன்று வெளியானது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →