Oct 1, 2026
Thisaigal NewsYouTube

அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகை

நடிகர் அஜித் தற்போது கார் பந்தயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். அண்மையில் கார் பந்தயத்தில் கலந்து கொண்டிருந்த அஜித்தை நேரில் சென்று சந்தித்தார் நடிகை ஸ்ரீலீலா. இவர் AK 64 படத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கின்றாராம்.

இந்த நிலையில், AK 64 திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்றொரு நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வரும் ரெஜினா நடிக்கப் போவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இவர் ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →