Oct 8, 2026
Thisaigal NewsYouTube

இளம் நாயகிக்கு ஜோடியாகும் துருவ் விக்ரம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இளம் நாயகிக்கு ஜோடியாகும் துருவ் விக்ரம்

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் குறித்து அண்மைய வெளியாகியுள்ளது.

அவ்வகையில், முன்னணி இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில்தான் துருவ் விக்ரம் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளாராம். தக் லைஃப் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம் காதல் கதைக் களத்தில் இளம் நடிகர்கள், நடிகைகளை வைத்து படம் இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஹீரோவாக துருவ் விக்ரம் தேர்வாகியுள்ளார். மேலும் கன்னட திரையுலகம் மூலம் ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக இடம் பிடித்த நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம்.

செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ருக்மிணி தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →