Oct 8, 2026
Thisaigal NewsYouTube

ரஜினியின் கூலி படத்தில் கமல்ஹாசன் இருக்கிறாரா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஜினியின் கூலி படத்தில் கமல்ஹாசன் இருக்கிறாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமானத் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, கூலி படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக கமலுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அனைத்தும் சரியாக நடந்தால், அடுத்த வாரம் கமல் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →