Oct 11, 2026
Thisaigal NewsYouTube

சினிமாவில் இருந்து விலகுகிறாரா ராஜமௌலி?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சினிமாவில் இருந்து விலகுகிறாரா ராஜமௌலி?

எஸ்.எஸ் ராஜமௌலி, இந்திய சினிமா கொண்டாடப்படும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர். கடைசியாக இவரது இயக்கத்தில் RRR திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.

நாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலியின் கனவுப் படமான மகாபாரதம் தயாராக உள்ளது. இந்த படம் குறித்து பேச்சுகள் அவ்வப்போது அடிபடுகிறது. இந்நிலையில் அண்மைய தகவலொன்று வெளியாகியுள்ளது. மகாபாரதம் படத்தோடு எஸ்.எஸ்.ராஜமௌலி சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →