Jul 27, 2026
Thisaigal NewsYouTube
முடிவுக்கு வருகிறது கோட். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றார் விஜய்
சினிமா

முடிவுக்கு வருகிறது கோட். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றார் விஜய்

Share:

இந்தியா, ஏப்ரல் 05-

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் இதில் சினேகா, மைக் மோகன், பிரபுதேவா, லைலா, பிரசாந்த், அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்ட உள்ளனர். அதற்கான பணிகள் தற்போது வெளிநாட்டில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோட் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதையடுத்து சென்னை, ஐதராபாத், துருக்கி, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

கடந்த மாதம் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கிரீன் பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றிருந்த நடிகர் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தினசரி படப்பிடிப்பு முடிந்ததும் தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களுடன் பேசி, செல்பி எடுத்து மகிழ்ந்தார் விஜய், இதுதவிர ஓட்டலிலும் நள்ளிரவு வரை தன்னை காண காத்திருந்த ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவர்களின் அன்பால் நெகிழ்ந்துபோனார்.

இந்த நிலையில், கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தற்போது துபாய் கிளம்பி சென்றுள்ளார் விஜய். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டிக் குழந்தையை பார்த்ததும் கையசைத்து அக்குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடிய வீடியோவும் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு