Oct 10, 2026
Thisaigal NewsYouTube

குட் நைட் இயக்குனருடன் சேரும் சிவகார்த்திகேயன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குட் நைட் இயக்குனருடன் சேரும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அண்மைய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 'குட் நைட்' படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →