Oct 8, 2026
Thisaigal NewsYouTube

விவாகரத்து முடிவில் ஹன்சிகா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விவாகரத்து முடிவில் ஹன்சிகா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா தனது கணவரைப் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார். கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனைதான் இதற்குக் காரணம் என்று பேசப்படுகிறது.

ஹன்சிகா விரைவில் விவாகரத்து முடிவை நாட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதனை சோஹைல் கட்டாரியா மறுத்துள்ளார். அவர் மறுத்தாலும் இந்த விவகாரத்தில் ஹன்சிகா மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள கணவரின் புகைப்படங்களை ஹன்சிகா அதிரடியாக நீக்கி இருக்கிறார். விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இச்செயல் அமைந்துள்ளது.

இதனால் ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →