Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டும் புஷ்பா 2
சினிமா

ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டும் புஷ்பா 2

Share:

இந்தியா, ஏப்ரல் 12-

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படம் சந்தன மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

புஷ்பா திரைப்படம் மாஸ் ஹிட் அடித்ததோடு 350 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதனால் குஷியான படக்குழு, அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாராகி வரும் அப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. முதல் பாகத்தைக் காட்டிலும் படு பிரம்மாண்டமாக இப்படத்தை படமாக்கி இருக்கின்றனர். இதனால் புஷ்பா 2 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் 6 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி ஒன்றும் இடம்பெறுகிறதாம். அந்தக் காட்சியை படமாக்க மட்டும் சுமார் 60 கோடி செலவழித்து உள்ளதாம் படக்குழு. இப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அதன் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி அப்படத்தின் ஓடிடி மற்றும் ஆடியோ உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகி உள்ளதாம்.

அந்த வகையில் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். அந்நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அப்படத்தின் ஆடியோ உரிமையை டீ-சீரிஸ் நிறுவனம் ரூ.60 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி ரிலீசுக்கு முன்பே புஷ்பா 2 படம் வசூல் வேட்டை நடத்தி வருவதால் அப்படக்குழுவினர் செம்ம குஷியில் உள்ளார்களாம்.

Related News

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: தமிழ் திரையிசையில் கம்யூனிசச் சிந்தனைகளின் அழியாத சுவடுகள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: தமிழ் திரையிசையில் கம்யூனிசச் சிந்தனைகளின் அழியாத சுவடுகள்

டிஸ்னி சினிமாகான் 2026: 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'ஸ்டார் வார்ஸ்' குறித்த அதிரடி அறிவிப்புகள்!

டிஸ்னி சினிமாகான் 2026: 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'ஸ்டார் வார்ஸ்' குறித்த அதிரடி அறிவிப்புகள்!

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: சரணடைய காவல்துறை கெடு

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: சரணடைய காவல்துறை கெடு

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து