Oct 23, 2026
Thisaigal NewsYouTube

மறுமணம் குறித்து மனம் திறந்தார் சமந்தா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மறுமணம் குறித்து மனம் திறந்தார் சமந்தா

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.

4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற சமந்தா, 2010ல் "யே மாயா சேஸவே" (Ye Maaya Chesave) எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவின் (Akkineni Nagarjuna) மகன் அக்கினேனி நாக சைதன்யா.

சமந்தாவிற்கு அவருடன் ஏற்பட்ட நட்பு வளர்ந்து, இருவரும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என மாற்றம் செய்து கொண்டார்.

ஆனால், 2021 ஜூலை மாதம், சமூக வலைதளங்களில் தனது பெயரில் "அக்கினேனி" எனும் கணவர் குடும்ப பெயரை அவர் நீக்கினார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

சமந்தா-சைதன்யா திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →