Jun 4, 2026
Thisaigal NewsYouTube
விஜய்யின் கோட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மறைமுகமாக கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட் மூவீஸ்?
சினிமா

விஜய்யின் கோட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மறைமுகமாக கைப்பற்றியதா ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

Share:

இந்திய, ஜூலை 1-

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மறைமுகமாக கைப்பற்றி உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள் அனைத்தையும் அந்நிறுவனமே கைப்பற்றி ரிலீஸ் செய்து வந்தது. அதிலும் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் அந்நிறுவனம் வெளியிட்ட படங்கள் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் லாபத்தை ஈட்டியதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் அஜித், விஜய், சூர்யா, கமல், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் அதை ரெட் ஜெயண்ட் தான் வெளியிடும் என்கிற நிலை இருந்த நிலையில், அதிலிருந்து முதல் ஆளாக வெளிவந்த ஹீரோ என்றால் அது தளபதி விஜய் தான். அவர் நடித்த பீஸ்ட் படத்துக்கு பின்னர் ரெட் ஜெயண்ட் வசம் தன் படத்தை கொடுப்பதை தவிர்த்து வருகிறார். இருப்பினும் விஜய் படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களிடம் இருந்து ஓரிரு ஏரியா ரிலீஸ் உரிமையை மட்டும் கைப்பற்றி ரெட் ஜெயண்ட் வெளியிட்டு வந்தது

விஜய்யின் வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் வெளியிட்டது. ஆனால் அந்நிறுவனத்திடம் இருந்து வாங்கி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆற்காடு உள்ளிட்ட ஏரியாக்களில் மட்டும் ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்தது. அடுத்து லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமே ரிலீஸ் செய்ததால் அது ரெட் ஜெயண்ட் கைவசம் செல்லவில்லை. இப்படி தொடர்ந்து விஜய் ரெட் ஜெயண்டை ஒதுக்கி வரும் நிலையில், கோட் பட ரிலீஸ் உரிமையை அந்நிறுவனம் மறைமுகமாக கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு