Jun 13, 2026
Thisaigal NewsYouTube
ஹைலைட்டே விநாயகன் தான்- லிங்குசாமி வாழ்த்து
சினிமா

ஹைலைட்டே விநாயகன் தான்- லிங்குசாமி வாழ்த்து

Share:

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி பார்த்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "மும்பையில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பைனல் கட்டை பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. விஷுவலாக பார்க்கும் பொழுது விக்ரம் அருமையாக உள்ளார்.

விநாயக் கவனத்தை ஈர்க்கிறார். அனைவரும் திறமையாக நடித்துள்ளனர். படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Related News

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ