Jul 28, 2026
Thisaigal NewsYouTube
புரட்சி தலைவரின் ரசிகராக கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'
சினிமா

புரட்சி தலைவரின் ரசிகராக கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'

Share:

இந்தியா, மே 27-

நடிகர் கார்த்தி, இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் 26-ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

நடிகர் கார்த்தி இன்று தன்னுடைய 47-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே காலை முதலே அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஒருபுறம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மற்றொருபுறம்... கார்த்தியின் ரசிகர்கள் ரத்த தானம், அன்னதானம், இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் என ஜமாய்த்து வருகிறார்கள்.

கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று... அவர் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் '96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள 27-ஆவது படமான, 'மெய்யழகன்' படத்தின் டைட்டிலை வெளியிட்டதோடு, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்தே பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார். அதே போல் நடிகை ஸ்ரீதிவ்யாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இதை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கும் 26-ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. போலீஸ் கெட்டப்பில் இருக்கும் கார்த்தியை சுற்றி எம்.ஜி.ஆர். வேடமிட்ட பலர் நிற்கிறார்கள்.

கார்த்தி அணிந்துள்ள போலீஸ் உடையில் கோடுகள் இடம்பெற்றுள்ளதால் அவர் இப்படத்தில் போலீசாக நடிக்க வில்லை என்பது தெரிகிறது.வா வாத்தியாரே’ என்று இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு காமெடி படமா? என்றும், கார்த்தி இப்படத்தில் நாடக நடிகராக நடிக்கிறாரா/ என்கிற சந்தேகத்தையும் இந்த போஸ்டர் எழவைத்துள்ளது. 'கார்த்தி 26' படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு