Oct 11, 2026
Thisaigal NewsYouTube

அஜித்தின் அடுத்தப் பட இயக்குநர் யார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அஜித்தின் அடுத்தப் பட இயக்குநர் யார்

நடிகர் அஜித் குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளார். இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

கடந்த மாதம் திரையரங்கில் வெளிவந்த இப்படம் உலகளவில் வசூல் வேட்டையாடி சாதனைப் படைத்துள்ளது. குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

யாருடைய இயக்கத்தில் அடுத்ததாக அஜித் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். தனுஷ் கதை கூறியுள்ளதாகத் தகவல் வெளிவந்தது. அதே போல் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்தப் பட்டியலில் இருக்கிறார் என்றனர்.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்று கூறுகின்றனர். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைகிறார்கள்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →