Oct 11, 2026
Thisaigal NewsYouTube

யூடியூப் சேனலைத் தொடங்கினார் அஜித் குமார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யூடியூப் சேனலைத் தொடங்கினார் அஜித் குமார்

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் எனலாம். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனைப் படைத்தது.

தற்போது, அஜித் தீவிரமாக கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், 'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் அவை தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது. அஜித்குமாரின் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பதிந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →