Oct 7, 2026
Thisaigal NewsYouTube

வடிவேலு - பிரபு தேவா 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கூட்டணி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வடிவேலு - பிரபு தேவா 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கூட்டணி

நகைச்சுவையில் மாபெரும் வரவேற்பு பெற்றக் கூட்டணி வடிவேலு - பிரபுதேவா. எங்கள் அண்ணா, மனதைத் திருடிவிட்டாய், காதலன் ஆகிய படங்களில் வடிவேலுவும் பிரபு தேவாவும் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

அதே போல் பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி மற்றும் வில்லு ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் வடிவேலு நகைச்சுவையில் மிரட்டி இருப்பார்.

ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இந்த கூட்டணி கிட்டதட்ட 25 ஆண்டுகளாக இணையாமல் இருந்தனர். சரியான கதை அமைந்தால் மீண்டும் இருவரும் இணைவோம் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது அக்கூட்டணி கைகோர்த்துள்ளது.

இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபு தேவா - வடிவேலு புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை துபாயில் நடைபெற்றுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →