Oct 15, 2026
Thisaigal NewsYouTube

தனது அடுத்த படத்தைத் தொடங்கிய எஸ்.எஸ். ராஜமௌலி…

திசைகள் செய்திப்பிரிவு
Share:

இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பல படங்கள் இயக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர். நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் பிரம்மாண்டத்தை காட்டி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது எல்லாம் கிடைக்க படக்குழுவினர் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருந்தனர்.

RRR படத்தில் நடித்தவர்கள் அடுத்த படங்களே நடித்து ரிலீஸ் செய்துவிட, ராஜமௌலி புதிய படம் குறித்து தகவலே வராமல் இருந்தது. இந்நிலையில் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை வைத்துப் படம் இயக்குவதாகப் பேசப்படுகிறது. அப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நாயகியாக ஹாலிவுட் வரை சென்று கலக்கும் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளை தனது புதிய படத்தின் சூட்டிங்கையும் ராஜமௌவி தொடங்கிவிட்டதாக தெரிகிறது, அவரது மகன் அதற்கான ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →