Oct 2, 2026
Thisaigal NewsYouTube

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகவிருப்பதாகக் கூறப்படும் திரைப்படம் ஜனநாயகன். வரும் ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நவம்பர் 21, விஜய்யின் ஜனநாயகன் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →