Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ராகவா லாரன்ஸின் "பென்ஸ்" படத்தில் இணையும் பிரபல நடிகர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ராகவா லாரன்ஸின் "பென்ஸ்" படத்தில் இணையும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை 'ரெமோ' பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்தப் படத்தில் தனுஷின் 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை சம்யுக்தா மேனன் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. சாய் அபியங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பென்ஸ் லோடிங்" என்று குறிப்பிட்டு தகவல் கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் 'பென்ஸ்' படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பேடி என்கிற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளனர். அது மலையாள நடிகர் நிவின் பாலியாக இருக்கும் என ரசிகர் எதிர்பார்க்கின்றனர். தோல்விப் படங்களால் பாதிக்கப்பட்ட நிவின் பாலிக்கு பென்ஸ் திருப்புமுனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் மாதவனும் படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →