Oct 13, 2026
Thisaigal NewsYouTube

விஜய் டிவியின் ஹிட் ஷோ குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜய் டிவியின் ஹிட் ஷோ குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடக்கம்

பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பலநிலை மக்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒன்று என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனத் தாராளமாகக் கூறலாம். சமையலோடு நிறைய கலாட்டா என்ற நிலையில் உருவான இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன.

ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்த குக் வித் கோமாளி சீசன் என்றால் அது 5வது சீசன் என்றே கூறலாம். அதோடு குக் வித் கோமாளியில் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் இல்லை என்பது மக்களின் கருத்தாக இருந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 6 குறித்து நடிகை ஷகீலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர், ஒரு நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜைச் சந்தித்ததாகவும், அவரிடம் 6வது சீசன் குறித்து கேட்டபோது ஏப்ரல் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அவர் கூறியதாகவும் ஷகீலா தெரிவித்துள்ளார். அதோடு இந்த 6வது சீசன் மூலம் தொகுப்பாளராக ஜாக்குலின் களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →