Oct 9, 2026
Thisaigal NewsYouTube

நாயகன் வேறு... தக் லைஃப் வேறு... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் மணிரத்னம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாயகன் வேறு... தக் லைஃப் வேறு... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் மணிரத்னம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் அண்மையில் அளித்த பேட்டியில் " நானும் கமல்ஹாசனும் இணைந்து மீண்டும் ஒரு நாயகன் திரைப்படத்தை எடுக்க எங்களுக்கு எண்ணம் இல்லை. அத்தகைய படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படத்தைக் கொடுக்க விரும்பினோம். ஆனால் பார்வையாளர்கள் எங்களிடம் நாங்கள் எடுத்த படத்திற்கு முற்றிலும் வேறுபட்ட படத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்" என மணிரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →