Oct 12, 2026
Thisaigal NewsYouTube

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனாட்சி சவுத்ரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனாட்சி சவுத்ரி

மிஸ் இந்தியா பட்டம் வென்று அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர்.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில், முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கப் போகும் படம் குறித்து ஓர் அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நாக சைதன்யாவின் 24-வது படத்தில் மீனாட்சி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →