Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தக் லைஃப் படத்தின் முத்த மழை வீடியோ பாடல் வெளியீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தக் லைஃப் படத்தின் முத்த மழை வீடியோ பாடல் வெளியீடு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலை சின்மயி பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இப்பாடல் திரைப்படத்தில் இல்லாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →