Sep 23, 2026
Thisaigal NewsYouTube
இன்று முதல் விஜயின் 'ஜனநாயகன்' - மலேசியாவில் 120-க்கும் மேற்பட்ட திரைங்குகளில் வெளியீடு
சினிமா

இன்று முதல் விஜயின் 'ஜனநாயகன்' - மலேசியாவில் 120-க்கும் மேற்பட்ட திரைங்குகளில் வெளியீடு

Share:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

முன்னதாக, இவ்வாண்டு ஜனவரி மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இத்திரைப்படம், பல்வேறு காரணங்களால் தாமதமாகி தற்போது வெளியீடு கண்டிருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவைத் தவிர மேலும் 30 நாடுகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.

எனினும், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் 18 வயதிற்குக் குறைவானவர்கள், பெற்றோருடன் வந்தாலும், சட்டப்படி திரையரங்குகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகளவில் சுமார் 7,000 முதல் 8,000 திரைகளில் இத்திரைப்படம் திரையிடப்படுகின்றது.

மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் வெளியீடு செய்யும் இத்திரைப்படம் நாடெங்கிலும் சுமார் 120-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகின்றது.

Related News

இன்று முதல் விஜயின் 'ஜனநாயகன்' - மலேசியாவில் 120-க்கும் ம... | Thisaigal News