Oct 6, 2026
Thisaigal NewsYouTube

சைமா அவார்ட்ஸ் 2025 தெலுங்கு: வில்லன் விருதை தட்டி தூக்கிய கமல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சைமா அவார்ட்ஸ் 2025 தெலுங்கு: வில்லன் விருதை தட்டி தூக்கிய கமல்

கடந்த சில நாட்களுக்கு முன் சைமா விருது விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தென்னிந்திய சினிமாவில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ் சினிமாவில் இருந்து விருதுகளை வென்றவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது தெலுங்கில் யார் யார், என்னென்ன விருதுகளை வென்றுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இதில் புஷ்பா 2 மற்றும் கல்கி ஆகிய படங்களுக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளன. அதிலும் கமல்ஹாசன் கல்கி திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த சுப்ரீம் யாஷ்கின் கதாபாத்திரத்திற்கு சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது வென்றவர்களின் பட்டியல்:

  • சிறந்த நடிகர் - அல்லு அர்ஜுன் (புஷ்பா 2)
  • சிறந்த நடிகை - ராஷ்மிகா மந்தனா (புஷ்பா 2)
  • சிறந்த இயக்குநர் - சுகுமார் (புஷ்பா 2)
  • சிறந்த திரைப்படம் - கல்கி சிறந்த வில்லன் - கமல் ஹாசன் (கல்கி)
  • சிறந்த துணை நடிகர் - அமிதாப் பச்சன் (கல்கி)
  • சிறந்த துணை நடிகை - அன்னா பென் (கல்கி)
  • சிறந்த நகைச்சுவை நடிகர் - சத்யா (மது வடலரா 2)

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →