Oct 23, 2026
Thisaigal NewsYouTube

லிச்பீல்ட் எவ்ரிமேன் சினிமா திட்டத்தில் தாமதம்: 2027-இல் திறக்கப்படும் என கவுன்சில் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லிச்பீல்ட் எவ்ரிமேன் சினிமா திட்டத்தில் தாமதம்: 2027-இல் திறக்கப்படும் என கவுன்சில் அறிவிப்பு

லிச்பீல்ட் நகரின் முன்னாள் டெபென்ஹாம்ஸ் கடை வளாகத்தில் ஏப்ரல் மாதம் திறக்கப்படவிருந்த புதிய எவ்ரிமேன் சினிமா திரையரங்கத் திட்டம், ஓராண்டு வரை தாமதமாகும் என்று உள்ளூர் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் தற்போதைய கட்டுமானப் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் தெரியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டேவ் ராபர்ட்சன் கவலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த லிச்பீல்ட் கவுன்சில் தலைவர் டக் புல்லன், திட்டமிட்டபடி சரியாகச் செயல்படாத ஒப்பந்ததாரர் நீக்கப்பட்டு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பழைய வணிக வளாகத்தை நவீனத் திரையரங்காக மாற்றுவது எதிர்பார்த்ததை விட அதிகச் செலவு மற்றும் கூடுதல் உழைப்பைக் கோருவதால், இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து, 2027 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இத்திரைவரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →