Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஜனநாயகன் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நிறைவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜனநாயகன் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நிறைவு

தளபதி விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சென்னை, கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்தப் படம் தான் விஜயின் கடைசி படம் என்றும், இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் முழு நேரமாக அரசியலில் இறங்கப் போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்தப் படத்திற்க்ய் மற்ற படங்களை விட கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், "ஜனநாயகன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து, திரையுலகில் இருந்து விஜய்க்கு வழி அனுப்பு விழாவாக கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது என்று கூறப்படுகிறது.

விஜய் , பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →