Jul 20, 2026
Thisaigal NewsYouTube
7 நாட்களில் 47 கோடி வசூல்: லவ் இன்சூரன்ஸ் கொம்பனி பாக்ஸ் ஆபீஸ் சாதனை
சினிமா

7 நாட்களில் 47 கோடி வசூல்: லவ் இன்சூரன்ஸ் கொம்பனி பாக்ஸ் ஆபீஸ் சாதனை

Share:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கொம்பனி' திரைப்படம் வசூலில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. வெளியான 7 நாட்களில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 47.12 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் 36.52 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப் படம், வெளிநாடுகளில் 10.60 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. வார இறுதி நாட்களில் சிறப்பான வசூலைப் பெற்ற நிலையில், வார நாட்களில் வசூல் சற்று குறைந்தாலும், 'அம்பேத்கர் ஜெயந்தி' விடுமுறை படத்தின் வசூலுக்குக் கைகொடுத்தது. குறிப்பாக 5-வது நாளில் மட்டும் இந்தியாவில் 4.15 கோடி ரூபாய் வசூலானது.

எதிர்காலக் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் இசை இளைஞர்களைக் கவர்ந்துள்ள நிலையில், வரும் வார இறுதியில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

தேசிய விருதுகளில் தமிழ் சினிமா 10 இடங்களைப்பிடித்து சாதனை: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

தேசிய விருதுகளில் தமிழ் சினிமா 10 இடங்களைப்பிடித்து சாதனை: வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

தேசிய விருது வெற்றிக் கொண்டாட்டம்: 'OM' படப்பிடிப்புத் தளத்தில் ஒன்றிணைந்த மம்மூட்டி, தனுஷ் மற்றும் படக்குழுவினர்

தேசிய விருது வெற்றிக் கொண்டாட்டம்: 'OM' படப்பிடிப்புத் தளத்தில் ஒன்றிணைந்த மம்மூட்டி, தனுஷ் மற்றும் படக்குழுவினர்

10 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது கோலிவுட் - தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு

10 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது கோலிவுட் - தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: இணையத்தில் பரவும் வதந்திகள்

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: இணையத்தில் பரவும் வதந்திகள்

கட்டா குஸ்தி 2' படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சோனி விழா தொலைக்காட்சி

கட்டா குஸ்தி 2' படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சோனி விழா தொலைக்காட்சி

மலேசியாவை அரபுத் திரைப்பட வரைபடத்தில் முன்னிலைப்படுத்திய எகிப்தியத் திரைப்படம்

மலேசியாவை அரபுத் திரைப்பட வரைபடத்தில் முன்னிலைப்படுத்திய எகிப்தியத் திரைப்படம்