Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ரஜினி படத்தில் முதல் முறையாகச் சேர்ந்த டி. ராஜேந்தர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஜினி படத்தில் முதல் முறையாகச் சேர்ந்த டி. ராஜேந்தர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் டி. ராஜேந்தர் இடையில் பல ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்தும், இருவரும் இன்னும் ஒரு படத்தில் கூட இணைந்து பணி புரிந்ததில்லை. ஆனால் தற்போது, ‘கூலி’ படத்தில் டி. ராஜேந்தர் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்பப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் பாடலொன்று அடுத்த மாதம் வெளியாகவிருப்பதாகவும், இதற்கான விளம்பரப் படப்பிடிப்பும் முடிந்து தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘கூலி’ படத்தின் முதல் பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், இந்தப் பாடலை டி. ராஜேந்தர் பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், ரஜினி படத்தில் முதல் முறையாக டி. ராஜேந்தர் பணி புரிந்திருக்கிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →