Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஜெயிலர் 2-டில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி
சினிமா

ஜெயிலர் 2-டில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி

Share:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 2023ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், சுராஜ், விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இதில் எஸ்.ஜே. சூர்யாதான் ஜெயிலர் 2-வில் வில்லனாக நடிக்கிறார் என்கிற தகவல் தொடர்ந்து பரவி வந்தது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை. இந்த நிலையில், நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதில் "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாக பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாக கூறுவார், வாய்ப்பு கிடைத்தால் போதும், இந்த இருவரும் உறவினர்களை போல் பேச தொடங்கி விடுவார்கள். ஒரு வகையில் நாங்கள் அப்படிதான்" என கூறியுள்ளார். இதன் மூலம் ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்