Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சக்கை போடு போடும் 'வீரன்'
சினிமா

சக்கை போடு போடும் 'வீரன்'

Share:

இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் 'வீரன்'. சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் நீண்ட நாட்களுக்கு பின் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வரும் இப்படம், முதல் வாரத்திலேயே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது.

இந்த படத்தில் ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டும் இன்றி, ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்தும் உள்ளார்.

இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் அவ்வப்போது படக்குழு மாஸான காமெடி சீன் ஒன்றின், வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Related News

'Bro Code' தலைப்பு சர்ச்சை: பின்வாங்கிய நடிகர் ரவி மோகன் – படத்திற்கு புதிய பெயர் சூட்ட முடிவு!

'Bro Code' தலைப்பு சர்ச்சை: பின்வாங்கிய நடிகர் ரவி மோகன் – படத்திற்கு புதிய பெயர் சூட்ட முடிவு!

திரையரங்குகளில் அதிரடி காட்டும் 'வீர கருப்பு': மலேசியத் திரையுலகிற்கு ஒரு புதிய மகுடம்!

திரையரங்குகளில் அதிரடி காட்டும் 'வீர கருப்பு': மலேசியத் திரையுலகிற்கு ஒரு புதிய மகுடம்!

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்: துபாயில் சிக்கியிருந்த நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாகச் சென்னை திரும்பினார்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்: துபாயில் சிக்கியிருந்த நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாகச் சென்னை திரும்பினார்

பிரபல இயக்குநரும் இசையமைப்பாளருமான 'தக்காளி' சீனிவாசன் காலமானார்

பிரபல இயக்குநரும் இசையமைப்பாளருமான 'தக்காளி' சீனிவாசன் காலமானார்

தாய் கிழவி: 63 வயது நடிகை ராதிகாவின் அசத்தல் நடிப்பு - உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை

தாய் கிழவி: 63 வயது நடிகை ராதிகாவின் அசத்தல் நடிப்பு - உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை

திரையுலகில் ஜொலிக்கும் பிரியங்கா மோகன்: 'மேட் இன் கொரியா' முதல் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வரை

திரையுலகில் ஜொலிக்கும் பிரியங்கா மோகன்: 'மேட் இன் கொரியா' முதல் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வரை