Jul 28, 2026
Thisaigal NewsYouTube
உருவாகிறது ‘மூக்குத்தி அம்மன் 2’; அம்மனாக நடிக்க மறுத்த நயன்... அவர் இடத்தை Replace செய்யப்போகும் நடிகை இவரா?
சினிமா

உருவாகிறது ‘மூக்குத்தி அம்மன் 2’; அம்மனாக நடிக்க மறுத்த நயன்... அவர் இடத்தை Replace செய்யப்போகும் நடிகை இவரா?

Share:

இந்தியா, மே 30-

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் ரேடியோவில் தொகுத்து வழங்கிய கிராஸ் டாக் என்கிற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. அதன்பின்னர் சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பாலாஜி. குறிப்பாக தீயா வேலை செய்யணும் குமாரு, நானும் ரெளடி தான் போன்ற படங்களில் இவரின் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக உருவெடுத்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்த வகையில் அவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால், தொடர்ந்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார் ஆர்.ஜே. பின்னர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. அப்படங்களும் ஹிட் அடித்தன.

சினிமாவில் பிசியான ஹீரோவாக நடித்து வந்தாலும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. அவரின் தமிழ் கமெண்ட்ரிக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஐபிஎல் அண்மையில் நிறைவடைந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அதன்படி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறாராம் ஆர்.ஜே.பாலாஜி.

ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால் மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாரா, அதன் இரண்டாம் பாகத்தில் அம்மனாக நடிக்கவில்லையாம். அவருக்கு பதில் நடிகை திரிஷாவை மூக்குத்தி அம்மனாக நடிக்க கமிட் செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே விடாமுயற்சி, தக் லைப் என கோலிவுட்டில் பிசியான நாயகியாக வலம் வரும் திரிஷா தற்போது மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளது தான் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு