Oct 12, 2026
Thisaigal NewsYouTube

ரூ.5 கோடி கேட்ட இளையராஜாவுக்கு குட் பேட் அக்லி தயாரிப்பாளர் பதிலடி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரூ.5 கோடி கேட்ட இளையராஜாவுக்கு குட் பேட் அக்லி தயாரிப்பாளர் பதிலடி

தாம் இசையமைத்த பழைய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வரும் கூறி இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்காக அவர் முன்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

தான் இசையமைத்த பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும், பாடல்களை நீக்க வேண்டும் என இளையராஜா நோட்டீஸில் கூறி இருந்தார்.

இந்த சர்ச்சை பற்றி குட் பேட் அக்லி தயாரிப்பாளர் பதிலடி கொடுத்து இருக்கிறார். யாரிடம் அனுமதி வாங்க வேண்டுமோ, அவரிடம் வாங்கிவிட்டோம் என தயாரிப்பாளர் ரவி ஷங்கர் கூறி இருக்கிறார். உரிமை யாரிடம் இருக்கிறதோ அவரிடம் அனுமதி பெற்றுதான் நாங்கள் பாடலைப் பயன்படுத்தி இருக்கிறோம் என அவர் கூறி இருக்கிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →