Oct 13, 2026
Thisaigal NewsYouTube

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த முன்னணி நடிகர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த முன்னணி நடிகர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்துடன் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது.

இப்படத்தில் அஜித் மனைவியும் நடிகையுமான ஷாலினி மற்றும் சிம்ரன் நடிக்கவுள்ளதாக தொடர்ந்து இணையத்தில் தகவல் வெளியாக படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நடிகர் சிம்பு எனக் கூறப்படுகிறது. சிம்பு நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →