Jun 13, 2026
Thisaigal NewsYouTube
சினிமா

பதவி விலகு தீனா- இசையமைப்பாளர் இளையராஜா பரபரப்பு ஆடியோ

Share:

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தற்போது இசையமைப்பாளர் தீனா உள்ளார். இந்த சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இரண்டு முறை தலைவராக இருந்த தீனா மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இது குறித்து தீனாவிடம் இளையராஜா பேசியுள்ள ஆடியோ வைரலாகியுள்ளது.

அந்த ஆடியோவில் "திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது. இந்த இசையமைப்பாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தது எம்.பி.ஸ்ரீனிவாசன்.

இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது. நீ ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்து விட்டாய்.

மூன்றாவது முறையாகவும் ஏன் போட்டியிடுகிறாய்? அடுத்தத் தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?

இந்த சங்கத்தில் தற்போது முறைகேடுகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், இதைச் சொல்கிறேன்.

நீ இரண்டு முறை தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறாய். அந்த மனநிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related News

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ