Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் சூர்யா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் சூர்யா

கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் தக் லைஃப் திரைப்படம் வெளிவந்தது. நாயகன் படத்திற்கு பின் மணி ரத்னம் இயக்கத்தில் இப்படத்தில் கமல் நடித்திருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

நடிப்பைத் தாண்டி கமல், ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படத்தை வெளியிட்டது. தொடர்ந்து, தக் லைஃப் படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். தற்போது. கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் 'வீர தீர சூரன்' பட இயக்குநர் அருண் குமாரின் படத்தைத் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து கேள்வி எழுந்து வந்த நிலையில், சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →