Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ராஜேஷ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ராஜேஷ்

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி 2010ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் பாஸ் என்கிற பாஸ்கரன். காமெடி கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ஆர்யா - சந்தானம் இணைந்து நடித்திருந்தனர். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க சுப்பு பஞ்சு அருணாச்சலம், லட்சுமி ராமகிருஷ்ணன், சித்ராலட்சுமணன், விஜயலக்ஷ்மி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

15 ஆண்டுகள் கடந்தாலும், இப்படத்தை இன்று பார்க்கும்போது அனைவரும் ரசிக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பாஸ் என்கிற பாஸ்கரன் படக்குழுவில் இருந்து இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். இந்த பேட்டியில் பாஸ் என்கிற பாஸ்கரன் எப்போது என அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் "ஆர்யாவும் நானும் இணைந்து அதற்கான முயற்சியில் இருக்கிறோம். கூடிய விரைவில் வரலாம்" எனக் கூறினார். அதன் பிறகு பேசிய இயக்குநர் ராஜேஷ் "அருமையான கதை இருக்கிறது. ஆர்யா, நயன்தாரா, சந்தானம் அனைவரும் சேர்ந்து அமைந்தால் கண்டிப்பாத் தொடரலாம்" எனக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →