Oct 12, 2026
Thisaigal NewsYouTube

தமிழ் சினிமாவிற்கு வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தமிழ் சினிமாவிற்கு வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் ராம் சரணின் பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், இதுவரை தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், விரைவில் தமிழில் காலடி எடுத்து வைக்கப் போகிறார் ஜான்வி கபூர். அவரைத் தமிழுக்குக் கொண்டு படப் போகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். அட்டகத்தி தினேஷை ஹீரோவாக வைத்து பா. ரஞ்சித் இயக்கி வரும் படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்கப் போகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. எனவே விரைவில் தமிழில் ஜான்வி கபூரைப் பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →