Oct 23, 2026
Thisaigal NewsYouTube

பிச்சைக்கார நாயே, பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிச்சைக்கார நாயே, பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி

இந்தியா, மே 09-

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில், தன்னுடைய கோமாளி வயதில் மூத்தவர் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் அவரை பிச்சைக்கார நாயே, பொருக்கி, என வாயிக்கு வந்ததையெல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார் TTF வாசனின் காதலி ஷாலின் சோயா.

விஜய் டிவியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-ஆவது சீசன் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆரம்பமானது. இந்த முறை நடுவராக செஃப் தாமுவுடன் சேர்ந்து, பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு மெய் சிலிர்க்கும் வகையில் சமையல் விருந்து கொடுத்து வரும் மதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது நடுவராக இணைந்துள்ளார்.

அதே போல் இந்த முறை ரக்ஷனுடன் சேர்ந்து, கடந்த 4 சீசன்களில் கோமாளியாக கலக்கிய மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளராக ஸ்ரீகாந்த் தேவா, அக்ஷய் கமல், வசந்த் வஷி, பிரியங்கா தேஷ்பாண்டே, சாலின் சோயா, சூப்பர் சிங்கர் பூஜா, சுஜிதா, உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

கடந்த 4 சீசனை ஒப்பிட்டால் இந்த சீசனில் கோமாளிகள் கொஞ்சம் சொதப்புவது போல் உள்ளது என... ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே போல் குக் வித் கோமாளியில் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, எல்லை மீறி கோமாளிகள் போட்டியாளர்களை தொட்டு பேசுவதாக சமீபத்தில் பொங்கி இருந்தார் TTF வாசன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், தன்னுடைய காதலி என ஷாலின் சோயாவை குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனுபவங்களை ஷாலின் பகிர்ந்துள்ளார். அதன்படி தனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணமே டிடிஎப் தான் என கூறி இருந்த ஷாலின் சோயா, குக் வித் கோமாளி போனதும் அந்நிகழ்ச்சியை நீ பார்க்காத என டிடிஎப் வாசனிடம் சொல்லிவிட்டாராம். ஏனெனில் அந்நிகழ்ச்சியில் குரேஷி, புகழ் ஆகியோர் ஷாலினின் கன்னத்தை கிள்ளி கிள்ளி பேசுவதை பார்த்து டிடிஎப் கடுப்பாகிவிடுவாராம். அதனால் அவரிடம் இந்நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என சொல்லியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →