Oct 2, 2026
Thisaigal NewsYouTube

சுந்தர் சி-க்கு பதில் ரஜினி படத்தை இயக்கப் போவது யார்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுந்தர் சி-க்கு பதில் ரஜினி படத்தை இயக்கப் போவது யார்?

நடிகர் ரஜினியின் அடுத்து படமான "தலைவர் 173" படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். அந்தP படத்தை சுந்தர் சி இயக்கP போவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் சில தினங்களில் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக சுந்தர் சி அறிவித்தார்.

ரஜினி கதையில் பல மாற்றங்கள் செய்யச் சொன்ன நிலையில் தான் சுந்தர் சி வெளியேறி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியை அடுத்து இயக்கப் போவது யார் தான் என பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தற்போது ஒரு புது தகவல் உலா வருகிறது.

நடிகர் தனுஷ் தான் ரஜினியை இயக்கப் பேச்சு வார்த்தையில் இருக்கிறார் என கிசுகிசு பரவி வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்குப் பிறகு தற்போது இப்படி ஒரு தகவல் பரவி வருவதால், அது வதந்தியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும் தலைவர்173 படத்தின் இயக்குனர் யார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் உறுதியாகும். 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →