Oct 14, 2026
Thisaigal NewsYouTube

ரசிகர்கள் கொண்டாடிய அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அமரன். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த ஆண்டு திரைக்கு வந்த சூப்பர் ஹிட் படங்களில் அமரன் திரைப்படமும் ஒன்று. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களும் பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில், தற்போது அனைத்துலக அளவில் அமரன் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் 'அமரன்' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான முதல் 10 ஊக்கமளிக்கும் படங்கள் பட்டியகில் அமரன் இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →