Oct 23, 2026
Thisaigal NewsYouTube

திரிஷாவை கொக்கி போட்டு இழுக்க பார்க்கும் பாலிவுட் ஹீரோ பிள்ளையார் சுழி போட போகும் அட்லி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திரிஷாவை கொக்கி போட்டு இழுக்க பார்க்கும் பாலிவுட் ஹீரோ பிள்ளையார் சுழி போட போகும் அட்லி

இந்தியா, ஏப்ரல் 02 -

அட்லி எங்கே போனாலும் அங்கே வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப போன இடத்தில் எல்லாம் வசூலை வாரி குவித்து வருகிறார். அந்த வகையில் விஜய்க்கு மூன்று படங்களை ஹிட் ஆக கொடுத்து அண்ணன் தம்பி போல் உறவு முறையை ஏற்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட லெவலுக்கு போக வேண்டும் என்று பாலிவுட்டில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தார். அந்த வகையில் ஷாருக்கானை ஹீரோவாகவும் நயன்தாராவை ஜோடியாக போட்டு கூட்டணி சேர்த்த முதல் படமே 1100 கோடி வசூலை கொடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டார்.

அடுத்ததாக மறுபடியும் விஜய்யை வைத்து எடுக்கலாம் என்று இங்கே வந்தார். ஆனால் விஜய் இப்பொழுது நடிப்பையும் தாண்டி அரசியலில் பிசியாக இருப்பதால் அக்கட தேசத்திற்கு போய் உன் திறமையை காட்டு என்று தட்டிக் கொடுத்து அல்லு அர்ஜுனாவை கைகாட்டி விட்டார்.

இதனால் கூடிய விரைவில் அல்லு அர்ஜுனாவை வைத்து அட்லி இயக்கப் போகிறார். இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று பாலிவுட்டில் இன்னொரு ஹீரோவும் ஆசைப்பட்டு வருகிறார். அவர் வேறு யாருமில்லை சல்மான் கான்.

தற்போது இவர்களுடைய கூட்டணி பேச்சு வார்த்தையில் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அட்லீ இடம் எனக்கு ஜோடியாக நடிப்பதற்கு த்ரிஷாவை போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். ஏனென்றால் த்ரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைப் மற்றும் கோட் படத்தில் கேமியோ கதாபாத்திரத்திலும் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இவரை எப்படியாவது இழுத்து விட்டால் இன்னும் காம்பினேஷன் நல்ல ஸ்ட்ராங்காக இருக்கும் என்று அட்லீிடம் சல்மான்கான் கூறியிருக்கிறார். ஏற்கனவே அட்லீ பெரிய அக்கா நயன்தாராவை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்து விட்டார்.

தற்போது சின்ன அக்கா திரிஷாவையும் வைத்து வெற்றியை கொடுக்கலாம் என்று புதுசாக பிள்ளையார் சுழி போட போகிறார். கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →