Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஹாலிவுட் புகழ்பெற்ற நடைபாதையில் மலேசிய நட்சத்திரம் மிஷெல் இயோ
சினிமா

ஹாலிவுட் புகழ்பெற்ற நடைபாதையில் மலேசிய நட்சத்திரம் மிஷெல் இயோ

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.19-

மலேசியாவில் பிறந்து ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்த நடிகை மிஷெல் இயோ, அனைத்துலக திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ' Hollywood Walk of Fame'-இல் நட்சத்திர அந்தஸ்து பெற்று கௌரவிக்கப்பட்டார்.

இந்த விழாவில் மஞ்சள் நிற ஆடையுடன் கலந்து கொண்ட 64 வயதான மிஷெல் இயோ, மலேசியாவிலிருந்து ஹாலிவுட் வரையிலான தனது பயணம் சவால்கள் நிறைந்தது என்றும், எல்லைகளையும் மொழிகளையும் கடந்த கதைகளில் இடம் பெற்றது தனது பாக்கியம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்த கௌரவம் தனக்கு மட்டுமே உரியதல்ல, கடந்த நாற்பது ஆண்டு காலத் திரைப் பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் உரித்தானது என்று அவர் கூறினார்.

"நமது தொடக்கம் நமது இலக்கை தீர்மானிப்பதில்லை" என்பதை இந்த அங்கீகாரம் அனைவருக்கும் நினைவூட்டும் என்று நம்புவதாகக் குறிப்பிட்ட மிஷெல் இயோ, ஹாலிவுட்டின் மிகவும் செல்வாக்குமிக்க ஆசியக் கலைஞர்களில் ஒருவராகத் தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்