Oct 6, 2026
Thisaigal NewsYouTube

எஸ்டிஆர்49 படத்தின் அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்டிஆர்49 படத்தின் அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாகிறது

சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் குண்டர் கும்பல் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தில் எஸ்டிஆர் முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையைக் குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் அடுத்தக் கட்டப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →