தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை சேர்க்கும் படமாக ‘அரசன்’ அமையும் என நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என அவர் கூறியுள்ளார்.
இந்தி திரையுலகில் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, அரசன் திரைப்படமும் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் என்று சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தின் கதை, தயாரிப்பு தரம் மற்றும் படக்குழுவின் உழைப்பு ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.








