Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மீண்டும் இணையும் ப்ளாக் பஸ்டர் காம்போ! அஜித்தின் அடுத்தப் படத்தின் அண்மையத் தகவல்…

திசைகள் செய்திப்பிரிவு
Share:

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ளது. ஈராண்டுகள் காத்திருப்புக்குப் பின் வெளிவரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை பிரபல இயக்குநரும் அஜித்தின் தீவிர ரசிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் என இதுவரை தெரியவில்லை. அண்மையத் தகவல் என்னவென்றால், அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ப்ளாக் பஸ்டர் வெற்றி கூட்டணியில் இதற்கு முன், பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →