Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சிக்கிடு பாடலின் காட்சிகள் அற்புதமாக இருக்கும் - அனிருத்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிக்கிடு பாடலின் காட்சிகள் அற்புதமாக இருக்கும் - அனிருத்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சிக்கிடு பாடலை பற்றி அனிருத் சில சுவாரசிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் " சிக்கிடு பாடலின் வீடியோவை லோகேஷ் கனகராஜ் மிக அருமையாக எடுத்து இருந்தார். முதன்முதலில் அந்த வீடியோவை பார்த்த போது நாங்கள் மிரண்டு விட்டோம். பல வருடங்களுக்கு பிறகு ரஜினி சாரை நாம் இந்தத் தோற்றத்தில் பார்க்கிறோம். ரஜினி சார் ஷூட்டிற்கு முன்பு எந்தப் பாடலையும் கேட்க மாட்டார். இப்பாடலின் முதல் நாள் ஷூட்டிங் முடிந்த பின்பு இப்பாடல் அவருக்கு பிடித்ததாக கூறினார்" என அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →