Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாக்குப்பதிவு!
சினிமா

ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாக்குப்பதிவு!

Share:

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 23, 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணித் திரைநட்சத்திரங்கள் அதிகாலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையிலும் வாக்களித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாக்களிக்க வந்தபோது ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இதேபோல், பெல்ஜியத்தில் இருந்து கார் பந்தயப் பயிற்சியை முடித்துவிட்டு அவசரமாக சென்னை திரும்பிய நடிகர் அஜித், திருவான்மியூரில் தனது வாக்கைப்பதிவு செய்தார். நடிகர்கள் விக்ரம், தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரும் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

Related News